Enable Javscript for better performance
வனத் துறையினருக்கு பாம்பு பிடித்தல் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    அரூரில் வனத் துறையினருக்கு பாம்பு பிடித்தல் மற்றும் விடுவித்தல் தொடர்பான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     பயிற்சியை அரூர் மாவட்ட வன அலுவலர் செண்பகப்பிரியா தொடக்கி வைத்தார். பாம்புகளை பிடித்தல் மற்றும் அதனை வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தல் குறித்து வன விலங்கு ஆர்வலரும், ரயில்வே ஊழியருமான ஹரிமணி வனத் துறையினருக்கு பயிற்சி அளித்தார்.
     நாகப்பாம்பு, சாரைப்பாம்பு, கண்ணாடி விரியன், மலைப்பாம்பு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடிப்பது குறித்து வனத் துறையினருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் அரூர், மொரப்பூர் பகுதியில் பணிபுரியும் 40-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai