அரூரில் வளர்ச்சிப் பணிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு
By DIN | Published on : 29th January 2017 02:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரூர் ஒன்றியத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து அந்தத் தொகுதி எம்எல்ஏ ஆர்.ஆர்.முருகன் சனிக்கிழமை ஆய்வு நடத்தினார்.
அரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 34 கிராம ஊராட்சிகளில் நடப்பு நிதியாண்டில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் எம்எல்ஏ ஆர்.ஆர் முருகன் கலந்தாய்வு செய்தார். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
அரசுப் பள்ளிகள் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு சுற்றுச் சுவர் வசதிகள், ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்களுக்கு கட்டட வசதிகள், சிறுபாலங்கள், கழிவுநீர் கால்வாய் வசதிகள், உயர்கோபுர மின் விளக்குகள், கிராமப் பகுதியில் புதிய நூலகங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர்.
இதேபோல மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுடன் எம்எல்ஏ ஆர்.ஆர்.முருகன் கலந்தாய்வு மேற்கொண்டார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சி.அன்பழகன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சி.தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.