Enable Javscript for better performance
சுகாதார வாழ்வுக்கு தனிநபர் கழிப்பறை அவசியம்: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    சுகாதார வாழ்வுக்கு தனிநபர் கழிப்பறை அவசியம்: ஆட்சியர்

    By DIN  |   Published on : 29th January 2017 03:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுகாதார வாழ்வுக்கு தனிநபர் கழிப்பறை அவசியம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் அறிவுறுத்தினார்.
    குடியரசு தின விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உங்குரானஅள்ளி ஊராட்சிக்குள்பட்ட எட்டிமரத்துப்பட்டியில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது:
    திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக இந்த ஊராட்சியை மாற்ற வேண்டும். மேலும், தனிநபர் கழிப்பறை அமைப்பதற்கு தமிழக அரசு ரூ.12 ஆயிரம் வழங்கி வருகிறது. அதைப் பெற்று, அனைவரும் தனிநபர் கழிப்பறையை அமைக்க வேண்டும்.
    வீடுதோறும் குப்பைகளைச் சேகரிக்க வரும் தூய்மைக் காவலர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்து அளித்து, ஒத்துழைப்பு நல்கவேண்டும். பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
    2016-17-ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் வரவு-செலவு திட்டத்தை, ஜன.15 வரையிலான முன்னேற்ற அறிக்கையுடன் ஒப்பிட்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சாத்தியமான பணிகளையும், 2017-18-ஆம் ஆண்டு வேலை வழங்குவதற்கான தொழிலாளர் மதிப்பீட்டுத் தொகை இறுதி செய்யப்படுவதற்கான பணிகள் குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
    கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், கோட்டாட்சியர் ராமமூர்த்தி, வட்டாட்சியர் சரவணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அ.விமலாதேவி, வட்ட வழங்கல் அலுவலர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai