ஜன.31-இல் மக்கள் தொடர்பு முகாம்
By DIN | Published on : 29th January 2017 03:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சீங்காடு கிராமத்தில் வரும் ஜன.31-இல் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாலக்கோடு வட்டத்துக்குள்பட்ட சீங்காடு கிராமத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறைகளின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கின்றனர். எனவே, முகாமில் சீங்காடு கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கி பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டம்:
ஒசூரில் 16 பேர் மீது வழக்குப் பதிவு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒசூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் போராட்டம் நடைபெற்றது. ஒசூர், சூளகிரி, கெலமங்கலம், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக காளேகுண்டாவைச் சேர்ந்த லோகேஷ்(28), வ.உ.சி. நகரைச் சேர்ந்த ராம்குமார் (30), நவதி கவுதம் (26), முனீஸ்வர் நகர் வனராஜா (47), அகிலா கார்டன் ஆனந்தன் (33) உள்பட மொத்தம் 16 பேர் மீது ஒசூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.