சுடச்சுட

  

  கால்நடைகளுக்கு இலவசமாக தீவனம் வழங்க வலியுறுத்தல்

  By அரூர்  |   Published on : 30th January 2017 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வறட்சி காரணமாக கால்நடைகளுக்கு இலவசமாக தீவனம் வழங்க மாநில அரசு முன்வர வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
   பாஜக விவசாய அணி தருமபுரி மாவட்ட பொதுச் செயலாளர் கே.குழந்தைரவி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
   தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டில் போதிய அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் விவசாயப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
   உழவுப் பணிகள் நடைபெறாத நிலையில், கால்நடைகளுக்கு தீவனம் போதிய அளவுக்கு கிடைப்பதில்லை. இதனால், கால்நடைகளுக்கு தேவையான அளவுக்கு தீவனங்களை இலவசமாக வழங்க மாநில அரசு முன்வர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai