சுடச்சுட

    

    தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகள் திறப்பு

    By தருமபுரி,  |   Published on : 30th January 2017 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.
     கண்ணுக்காரன்பட்டி மற்றும் அகரம் ஆகிய இடங்களில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டன. இப் பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 2.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், காரிமங்கலம், பென்னாகரம் பகுதிகளில் தரம் உயர்த்தப்பட்ட மாதிரிப் பள்ளிக் கட்டடங்களை விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பாலக்கோட்டில் மாதிரிப் பள்ளிக் கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
     நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் ராஜசேகரன், உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai