சுடச்சுட

    

    விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

    By தருமபுரி,  |   Published on : 30th January 2017 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
     தருமபுரியில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ. கந்தசாமி தலைமை வகித்தார்.
     மாநிலச் செயற்குழு உறுப்பினர் ந. நஞ்சப்பன், மாவட்டச் செயலர் எஸ். தேவராசன் உள்ளிட்டோர் பேசினர். மாவட்டத் துணைச் செயலர்கள் ஜெ. பிரதாபன், காசி தமிழ்க்குமரன், பொருளாளர் எம். கோபால், செயற்குழு உறுப்பினர்கள் எஸ். சின்னசாமி, எம். மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்த காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai