சுடச்சுட

  

  அரூரில் ரூ.70 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாகின.
   அரூர் - சேலம் பிரதான சாலையில், அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது. இந்த விற்பனை சங்க வளாகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.
   அரூர், கடத்தூர், தீர்த்தமலை, பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 2,500-க்கும் அதிகமான பருத்தி மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.
   இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி மூட்டை ரூ.6,199 முதல் ரூ.6,459 வரையிலும், டி.சி.எச். ரக பருத்தி மூட்டை ரூ.7,129 முதல் ரூ.7,289 வரையிலும் ஏலம் போனது.
   இந்த ஏலத்தில் ஈரோடு, திருப்பூர், சேலம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்றனர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai