Enable Javscript for better performance
கல்வித் துறையில் உதவியாளர் நேரடி நியமனம்: பிப்.4-இல் கலந்தாய்வு- Dinamani

சுடச்சுட

    

    கல்வித் துறையில் உதவியாளர் நேரடி நியமனம்: பிப்.4-இல் கலந்தாய்வு

    By தருமபுரி,  |   Published on : 31st January 2017 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் உதவியாளர் நேரடி நியமனப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் பிப்.4-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது.
     இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் உதவியாளர் நேரடி நியமனத்திற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
     இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்காக வரும் பிப்.4-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் உள்ள தொடக்கக் கல்வி இயக்ககக் கூட்டரங்கில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. எனவே, பணி நாடுநர்கள் இக்கலந்தாய்வில் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai