சுடச்சுட

    

    கோரிக்கைகளுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்த மாற்றுத் திறனாளிகள்!

    By தருமபுரி,  |   Published on : 31st January 2017 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குறைகேட்பு நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருமண உதவித் தொகை மற்றும் எரிவாயு இணைப்பு ஆகிய கோரிக்கைகளுடன் அமர்ந்து மாற்றுத் திறனாளி தம்பதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்துக்கு பாப்பாரப்பட்டி அருகேயுள்ள பாலவாடி கிராமத்தைச் சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத இரு தம்பதியினர் வந்தனர்.
     எம். வினோத்- வி. ஜெசிந்தாமேரி தம்பதியினர் தங்களுக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் திருமண உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடனும், சுரேஷ்- முத்துலட்சுமி தம்பதியினர் தங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடனும் வந்திருந்தனர்.
     பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததை அடுத்து, ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அமர்ந்து தாங்கள் அனுப்பிய மனுக்களின் நகல்களைத் தரையில் பரப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     தகவலறிந்து மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் ஆகியோர் கூட்ட அரங்கிலிருந்து வெளியே வந்து இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
     இவ்விரு கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என அவர்கள் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்டு சென்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai