Enable Javscript for better performance
சொட்டு நீர்ப் பாசனம்: தலித் விவசாயிகளுக்கு மானியம்- Dinamani

சுடச்சுட

  

  சொட்டு நீர்ப் பாசனம்: தலித் விவசாயிகளுக்கு மானியம்

  By தருமபுரி,  |   Published on : 31st January 2017 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க தலித் விவசாயிகளுக்கு, மானியம் வழங்கப்பட உள்ளது.
   இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில், தோட்டக்கலை மற்றும் வேளாண்துறை சார்பில் அனைத்து வட்டாரங்களிலும் குறைந்த நீரில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்ய உதவும் நுண்ணீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம் திட்டம் முழு அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
   இத்திட்டத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சத மானியம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
   தற்போது, இத்திட்டத்தில் தலித் விவசாயிகளுக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
   எனவே, இம்மாவட்டத்தைச் சேர்ந்த தலித் விவசாயிகள், தங்களது நிலத்திற்கான பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், மூன்று மார்பளவு புகைப்படம், குத்தகை நிலமாக இருப்பின், குறைந்தது 10 ஆண்டுகளுக்கான ஒப்பந்தப் பத்திரம், குடும்ப அட்டை நகல், சிறு விவசாயிகள் சான்று (வட்டாட்சியர் கையொப்பமிட்டது), மண் மற்றும் தண்ணீர் பரிசோதனைச் சான்று ஆகியவற்றுடன், அந்தந்த வட்டாரத்தில் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் மற்றும் வேளாண் உதவி இயக்குநர்கள் ஆகியோரை அணுகி திட்டத்தில் மானியம் பெற்றும் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.
   ஐ.வி.எல். பள்ளியில் குடியரசு தின விழா
   அரூர், ஜன.30: இருமத்தூர் ஐ.வி.எல். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா அண்மையில் நடைபெற்றது.
   இருமத்தூர் ஐ.வி.எல். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஐ.வி.எல். அக்ஷயா சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு பள்ளி செயலர் டி.கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
   கடந்த கல்வி ஆண்டில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு வழக்குரைஞர் எஸ்.எஸ்.மணியன், திரைப்பட நடிகை சிருஷ்டி டாங்கே, கவிஞர் கல்பாக்கம் ரேவதி, பள்ளித் தலைவர் ஏ.ஆகாஷ் ஆகியோர் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர்.
   விழாவில், சின்னத்திரை நடிகர்கள் கோவை அசோக், பிரபு ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சியும், பயிற்சியாளர் வைஷ்ணவியின் சிறப்பு யோகா பயிற்சி, பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பள்ளி முதல்வர் ஏ.பழனி, நிர்வாகிகள், டிரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
   விழாவில் பங்கேற்ற பள்ளி மாணவர்களின் பெற்றோர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு எல்.இ.டி. தொலைக்காட்சிப் பெட்டி, செல்லிடப்பேசி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள், ரூ. ஒரு லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டன.
   தீண்டாமை ஒழிப்பு தின
   உறுதிமொழி ஏற்பு
   கிருஷ்ணகிரி, ஜன.30: மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசுத் துறை அலுவலர்கள் திங்கள்கிழமை தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றனர்.
   மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியின் உருவப் படத்துக்கு ஆட்சியர் சி.கதிரவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
   இதைத் தொடர்ந்து, தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழியை அரசுத் துறை அலுவலர்கள் ஏற்றனர்.
   நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்டி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியர் வசந்தா, அலுவலக மேலாளர்கள் விஜயராகவன், ஜெயக்குமார் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
   தீரன் சின்னமலை பள்ளியில்
   விளையாட்டு தினவிழா
   ஊத்தங்கரை, ஜன.30: ஊத்தங்கரை தீரன் சின்னமலை பள்ளியில் நான்காம் ஆண்டு விளையாட்டு தின விழா அண்மையில் நடைபெற்றது.
   விழாவில் சிறப்பு விருந்தினராக தாளாளர் பிரசன்னமூர்த்தி, செயலர் தங்கராசு, பள்ளி முதல்வர் ஜோஸ்பின்டிசில்வா ஆகியோர் கலந்துகொண்டனர். மாணவர்கள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அணிவகுப்பு நடைபெற்றது.
   சேலத்தில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினர். பின்னர் மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாணவர்கள் பல்வேறுவிதமான நடனங்களை ஆடினர். சிலம்பம், யோகா, கராத்தே போன்ற செயல்பாடுகளின் திறன்களை மாணவர்கள் வெளிப்படுத்தினர். கராத்தே போட்டியில் மாணவர்கள் ஓடுகளை உடைத்ததும், சிமெண்டிலான கல்லை மாணவர் வயிற்றின் மீதுவைத்து உடைத்தும் சாகசம் செய்தனர். ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விளையாட்டுத் தின உடையில் நடனமாடினர். பெற்றோர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதியாக மாணவர்களுக்கான தொடரோட்டம் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் பரிசுகள் வழங்கினர். பரிசு பெற்ற மாணவர்களை முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் பாராட்டினர்.
   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்
   ஒசூர்,ஜன.30: ஒசூரில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
   நாம் காப்போம் சமூக அமைப்பு சார்பில் ஒசூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாம் காப்போம் அமைப்பின் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
   இதில் மரங்களின் முக்கியத்துவம், நீரின் முக்கியத்துவம் குறித்தும், பிளாஸ்டிக் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
   முகாமில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai