Enable Javscript for better performance
பள்ளி வாகனத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை பலி- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி வாகனத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை பலி

    By தருமபுரி,  |   Published on : 31st January 2017 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் பள்ளி வாகன சக்கரத்தில் சிக்கி, பச்சிளம் குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது.
     தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகேயுள்ள கடத்திகொள்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். தொழிலாளி. இவரது மனைவி சத்யா. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், மகளுடன், கீர்த்தனா என்கிற 11 மாத குழந்தையும் இருந்தது.
     இந்த நிலையில், தனியார் பள்ளியில் பயிலும் மகன் மற்றும் மகளை, அப்பள்ளியின் வேனில் ஏற்றுவதற்காக தாய் சத்யா பேருந்து நிறுத்தத்துக்கு வந்துள்ளார்.
     அப்போது, 11 மாத பச்சிளம் குழந்தையும் அவர்களுக்கு பின்னால் வந்து பள்ளி வேன் சக்கரத்தின் அருகே நின்றதாகக் கூறப்படுகிறது.
     அப்போது, இரு குழந்தைகளும் வேனில் ஏறிய பின்னர், ஓட்டுநர் வேனை இயக்கியுள்ளார்.
     அப்போது வேன் சக்கரத்தில் சிக்கிக் குழந்தை கீர்த்தனா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
     இதுகுறித்து, மாரண்டஹள்ளி காவல் நிலைய ஆய்வாளர் கண்ணையன் வழக்குப் பதிவு செய்து, தனியார் பள்ளி வேன் ஓட்டுநர் ராஜேந்திரன்(39) என்பவரைக் கைது செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai