சுடச்சுட

  

  பிப்.6-இல் மீசல்ஸ், ருபெல்லா தடுப்பூசி முகாம் தொடக்கம்

  By தருமபுரி,  |   Published on : 31st January 2017 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மீசல்ஸ், ருபெல்லா நோய்களைத் தடுப்பதற்காக தடுப்பூசி முகாம் பிப்ரவரி 6-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் தொடங்க உள்ளது.
   இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில், மீசல்ஸ், ருபெல்லா ஆகிய இரு நோய்களையும் தடுப்பதற்காக 9 மாதங்கள் முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள், மாணவ, மாணவியர் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.
   தட்டம்மை, பாரோமைக்சோ வைரஸால் உண்டாகி பரவக்கூடிய மூச்சு மண்டலத் தொற்று நோயாகும். இது மணல்வாரி அம்மை என்றும் அழைக்கப்படும். நோயுள்ள ஒருவரின் மூக்கு, வாய், சளியின் மூலமாக இது பரவுகிறது.
   ருபெல்லா, ஜெர்மானிய மணல்வாரி அம்மை எனப்படுகிறது. இது காற்றில் பரவும் தன்மைக் கொண்டது. குழந்தைகளை மட்டுமல்லாது பெரியவர்களைக் கூட இது தாக்கும். இந்த நோயினால் கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டால் பிறக்கும் குழந்தைகளுக்கு காது கேளாமை, கண்புரை, இருதய நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
   எனவே, தருமபுரி மாவட்டத்தில் 3,153 மையங்களில் பிப்ரவரி 6 -ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தடுப்பூசிகள் போடப்பட்டு மாலை 4 வரை அனைத்து குழந்தைகளும் கண்காணிக்கப்படுவர். வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை இத்தடுப்பூசிகள் போடப்படும்.
   அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஊட்டச்சத்து மையங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
   இந்த தடுப்பூசி முகாம்களுக்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த 269 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டத்தில் சுமார் 3,76,700 குழந்தைகளுக்கு இத் தடுப்பூசி போடப்பட உள்ளது. முகாம்களுக்குத் தேவையான தடுப்பூசி மருந்துகள் குளிர்பதன நிலையில் தயாராக உள்ளன.
   இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் குழந்தைகளை தடுப்பூசி செலுத்தி மீசல்ஸ், ருபெல்லா நோய்களிலிருந்து பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai