Enable Javscript for better performance
மாநில வளைபந்துப் போட்டியில் தருமபுரி மாணவருக்கு வெண்கலம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில வளைபந்துப் போட்டியில் தருமபுரி மாணவருக்கு வெண்கலம்

    By DIN  |   Published on : 22nd October 2017 04:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளைபந்துப் போட்டிகளில், தருமபுரி டான் மெட்ரிக் பள்ளி மாணவர் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார் .
    பள்ளிக் கல்வித் துறை சார்பில் குடியரசுத் தின விழா மற்றும் பாரதியார் பிறந்த நாள் விழாக்களையொட்டி மாநில அளவிலான வளைபந்துப் போட்டி மதுரையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. 15 மண்டல அணிகள் பங்கேற்ற இந்த போட்டிகளில் தருமபுரி டான் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
    இதில், மூத்தோர் ஒற்றையர் பிரிவில் சி. கார்த்திக் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார். மேலும், மாவட்ட அளவில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நினைவு விரைவு சைக்கிள் போட்டியில் டான் மாணவர்கள் நித்திஷ்குமார், கிஷோர்,நவாஸ், புகழேந்தி ஆகியோர் பரிசுகளைப் பெற்றனர்.
    இந்த மாணவர்களை பள்ளித் தலைவர் என். ராஜேந்திரன், தாளாளர் ஆர். உதயகுமார், செயலர் சவிதா உதயகுமார், முதல்வர் கே. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai