தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் ரூ. 7 கோடியில் கட்டப்பட்ட தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவில் கட்டப்பட்ட சேமிப்புக் கிடங்கை திங்கள்கிழமை சென்னையிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம். காளிதாசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சேலம் முதுநிலை மண்டல மேலாளர் வேலுமணி, கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் ஜி. மதிவாணன், செல்வராஜ், உதவிப் பொறியாளர் ராதாகிருஷ்ணன், மேலாளர் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.