தருமபுரி புத்தகத் திருவிழாவையொட்டி நூல் வாசிப்பை மையமாகக் கொண்ட பல்வேறு தலைப்புகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு முன்னதாகவே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தோர் விவரம் முறையே): கட்டுரைப் போட்டி (10,11,12 வகுப்புகள்): அவ்வையார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ர. அஸ்வினி, தோக்கம்பட்டி அமலா மேல்நிலைப் பள்ளி மாணவி சி. ஹெலன் ஜெனிபர், செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர் ம. இலக்கியவாணன்.
கட்டுரைப் போட்டி (6 முதல் 9 வகுப்புகள்): முக்குளம் சீகலஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி சு. பிரியா, தோக்கம்பட்டி அமலா மேல்நிலைப் பள்ளி மாணவி கி. வைஷ்ணவி, பேகாரஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சி. துளசிதாஸ்.
கவிதைப் போட்டி (6 முதல் 9 வகுப்புகள்): பேகாரஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி நா. தேன்மொழி, செந்தில் பப்ளிக் பள்ளி மாணவி யோ. தாருண்யா, தோக்கம்பட்டி அமலா மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். ஸ்ரீநிலா.
கவிதைப் போட்டி (10,11,12 வகுப்புகள்): பேகாரஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் மு. ராஜா, அவ்வையார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மு. ரீமாஷினி, செந்தில் பப்ளிக் பள்ளி மாணவி பொ. இளவரசி.
கல்லூரி அளவில் பேச்சுப் போட்டி: பெரியார் பல்கலை. விரிவாக்க மைய மாணவர் சந்தோஷ்குமார், தருமபுரி அரசுக் கலைக் கல்லூரி மாணவர் ச. கெளதம், அரசுக் கலைக் கல்லூரி மாணவி ரஞ்சிதா.
கவிதைப் போட்டி: தருமபுரி அரசுக் கலைக் கல்லூரி மாணவர் மு. சதீஷ்கண்ணன், பென்னாகரம் பெரியார் பல்கலை. உறுப்புக் கல்லூரி மாணவர் ச. சக்கரவேல், காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரி மாணவி வெ. அர்ச்சனா.
கட்டுரைப் போட்டி: பென்னாகரம் பெரியார் பல்கலை. உறுப்புக் கல்லூரி மாணவி மு. சந்தியா, தருமபுரி அரசுக் கலைக் கல்லூரி மாணவி எம். செளந்தர்யா, மொரப்பூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவி ச. ஸ்ருதிஸ்ரீ.