பெண்கள், குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான மனிதச் சங்கிலி

தருமபுரியில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான மனிதச் சங்கிலிப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

தருமபுரியில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான மனிதச் சங்கிலிப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதைக் கண்டித்து,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், தருமபுரி அரசு மருத்துவமனை அருகே மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.
அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ். கிரைசா மேரி, இரா. சிசுபாலன், எம். மாரிமுத்து, எம். ஆறுமுகம், வி.மாதன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 
போராட்டத்தில் பங்கேற்றோர் பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமையைத் தடுத்து நிறுத்த வேண்டும். வன்கொடுமையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.