ஸ்ரீ ராம் மெட்ரிக். பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கம்பைநல்லூர் ஸ்ரீ ராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது . 

கம்பைநல்லூர் ஸ்ரீ ராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது . 
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில், கம்பைநல்லூர் ஸ்ரீ ராம் கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.வேடியப்பன் தலைமை வகித்தார்.
முகாமில் அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் பேசியது: இருசக்கர வாகனங்களை 18-வயதுக்கு குறைவான சிறுவர்கள் ஓட்டக் கூடாது. வாகன ஓட்டிகள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுநர் தலைக்கவசமும், கார் ஓட்டுநர் மற்றும் பயணம் செய்வோர் சீட் பெல்ட்டும் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். மது அருந்திவிட்டும், செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டும் வாகனங்களை இயக்கக் கூடாது. சாலையில் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரும் சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். 
பள்ளி மாணவர்கள் தங்களின் பெற்றோர், உறவினர் அனைவரையும் தலைக்கவசம் அணிந்து செல்ல வலியுறுத்தி விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
இந்த முகாமில், காணொலிக் காட்சி மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், ஸ்ரீ ராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சாந்தி வேடியப்பன், நிர்வாக இயக்குநர் வே.தமிழ்மணி, பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், சிதம்பரம் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com