Enable Javscript for better performance
சகோதரி நிவேதிதை ரதம் பிப்.11-இல் தருமபுரி வருகை- Dinamani

சுடச்சுட

    

    சகோதரி நிவேதிதை ரதம் வரும் பிப்.11-ஆம் தேதி தருமபுரி வருகை தர உள்ளது.
    இதுகுறித்து தருமபுரி மாவட்ட ரத வரவேற்புக் குழுவைச் சேர்ந்த வசந்தராணி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சார்பில், சகோதரி நிவேதிதையின் 150-ஆவது பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் ரத யாத்திரை நடைபெறுகிறது. இந்த யாத்திரை கடந்த ஜன. 22-ஆம் தேதி கோவையில் தொடங்கியது. தமிழகத்தில் 27 மாவட்டங்கள் வழியாக 3,000 கி.மீ. கடந்து பிப்.22-ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது.
    இந்த நிலையில், நிவேதிதை ரதம் வரும் பிப்.11-ஆம் தேதி தருமபுரி நகருக்கு வருகை தர உள்ளது. பொதுமக்கள் பார்வைக்காக இந்த ரதம் தருமபுரி நெசவாளர் காலனியில் உள்ள மாவட்ட மைய நூலகத்துக்கு முன் அன்றைய தினம் காலை 10.30 மணி அளவில் நிறுத்தப்படும். எனவே, அனைத்து தரப்பினரும் இந்த ரதத்தை பார்வையிட்டு சகோதரி நிவேதிதைக்கு மரியாதை செலுத்தலாம் என்றார்.
    வரவேற்புக் குழு உறுப்பினர்கள், ரேணுகாதேவி ஜவஹர், எஸ்.கல்பனா சந்திரசேகர், ஸ்ரீ தேவி அனந்தகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai