Enable Javscript for better performance
சமூக நலத் துறை பாதுகாப்பு அலுவலர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சமூக நலத் துறை பாதுகாப்பு அலுவலர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

    By DIN  |   Published on : 09th February 2018 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 'பாதுகாப்பு அலுவலர்' என்ற பணியிடத்தில் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியுள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
    சமூகவியல், உளவியல், சமூக சேவை இவற்றில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டம், 22 முதல் 32 வயதுக்குள்பட்ட பிற்படுத்தப்பட்டோர் இப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
    விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்று, சாதிச் சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வரும் பிப். 12-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai