Enable Javscript for better performance
தனியார் கல்லூரி வாகனம் மோதியதில் இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பொம்மிடி அருகே தனியார் பொறியியல் கல்லூரி வாகனம் மோதியதில், இளைஞர் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
    பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி பகுதியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் வாகனம், தருமபுரியில் இருந்து கல்லூரி மாணவ, மாணவியர்களை ஏற்றிக் கொண்டு, கடத்தூர்-பொம்மிடி சாலையில் சென்றது. அப்போது, நத்தமேடு எனுமிடத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது கல்லூரி வாகனம் மோதியதில், கதிர்நாய்க்கன்ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணு மகன் சிவக்குமார் (20), பழைய புதுரெட்டியூரைச் சேர்ந்த பெருமாள் மகன் நாகராஜ் ஆகியோர் காயமடைந்தனர்.
    காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியில் சிவக்குமார் உயிரிழந்தார். காயமடைந்த நாகராஜ் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் தொடர்புடைய தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து ஓட்டுநர் தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து கடத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai