Enable Javscript for better performance
தொழில்முனைவோர் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தொழில்முனைவோர் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் அளிப்பு

    By DIN  |   Published on : 09th February 2018 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், தொழில்முனைவோர் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.
    பிரதமரின் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், தொழில்முனைவோருக்கு 10 நாள் பயிற்சி தருமபுரியிலுள்ள இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
    இப்பயிற்சியில், தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களை சேர்ந்த 32 பயனாளிகள் பங்கேற்றனர். பயிற்சியின் நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மையத்தில் நடைபெற்றது .
    மகளிர் திட்ட இயக்குநர் சரவணன், இந்தியன் வங்கி கிளை மேலாளர் அன்பு காமராஜ், முன்னோடி வங்கி மேலாளர் கணேசன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி பேசினர். பயிற்சி மையத்தின் இயக்குநர் ஆ.சுப்பிரமணி பயிற்சி நிலையத்தின் செயல்பாடுகளை விளக்கி பேசினார். பயிற்றுநர்கள் எம்.பொன்விழி, திவ்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai