Enable Javscript for better performance
பகுதிநேர நியாய விலைக் கடைகள் தொடங்குவது குறித்து ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    பகுதிநேர நியாய விலைக் கடைகள் தொடங்குவது குறித்து ஆலோசனை

    By DIN  |   Published on : 09th February 2018 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தில் புதிதாக பகுதிநேர நியாய விலைக் கடைகள் தொடங்குவது குறித்து, மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
    மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமை வகித்தார்.
    கூட்டுறவு துறை இணைப் பதிவாளர் சந்தானம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் அமீர்துல்லா, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம்.காளிதாசன் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர். ஏற்கெனவே, நியாய விலைக் கடைகள் தேவை என பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள், கூடுதல் எண்ணிக்கையில் குடும்ப அட்டைதாரர்களைக் கொண்ட கடைகள், அவற்றைப் பிரித்து புதிதாக பகுதிநேர நியாய விலைக் கடைகள் தொடங்கவுள்ள வாய்ப்புகள், அதிக தொலைவு சென்று பொருள்கள் வாங்கும் அளவுக்கு நியாய விலைக் கடைகள் உள்ள பகுதிகள் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டன.
    தேவையான புதிய பகுதி நேர நியாய விலைக் கடைகள் குறித்து விரைவில் அரசுக்கு பட்டியல் அனுப்ப அலுவலர்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவுரை வழங்கினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai