Enable Javscript for better performance
புதிய பேருந்து நிலைய வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    புதிய பேருந்து நிலைய வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 09th February 2018 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மொரப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலைய வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
    அரூர் வட்டம், மொரப்பூரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், சுமார் ரூ.2 கோடியில் புதிதாக பேருந்து நிலைய வளாகம் கட்டப்பட்டுள்ளது. மொரப்பூர் பேருந்து நிலையம் வழியாக தருமபுரி, கிருஷ்ணகிரி, கல்லாவி, கடத்தூர், அரூர் உள்ளிட்டப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலைய வளாகத்தில் இரண்டு அடுக்குகளில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில் 16 கடைகள் உள்ளன.
    பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து கடந்த 6 மாதங்களுக்கு மேலாகியும் பேருந்து நிலைய வளாகம் பூட்டப்பட்டுள்ளது. இதனால், மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பயன்பாடின்றி உள்ள பேருந்து நிலைய வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
    இதுகுறித்து மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழிதேவன் கூறுகையில், மொரப்பூர் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் மின் இணைப்பு பெற வேண்டியுள்ளது. எனவே, பேருந்து நிலைய வளாகத்தினை விரைந்து திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai