Enable Javscript for better performance
வன விலங்குகள் வேட்டை: ரூ.25 ஆயிரம் அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    வன விலங்குகளை வேட்டையாடியவருக்கு, வனத் துறை சார்பில், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    தருமபுரி வனக் கோட்டம், பாலக்கோடு வனச்சரக பகுதியில் வன விலங்குகளை மர்ம நபர்கள் வேட்டையாடுவதாக வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
    அதன்பேரில், வனச்சரகர் சி.செல்வம் தலைமையில், வனவர் சுப்பிரமணி மற்றும் வனத் துறையினர் பிக்கிலி காப்புக் காட்டில் ரோந்து சென்றனர். அப்போது, தம்பிவளை பகுதியில் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த க.சிவக்குமார் என்பவர் அத்துமீறி காப்புக் காட்டில் வன விலங்குகளை வேட்டையாடியது தெரியவந்தது.
    இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த வனத்துறையினர், வன விலங்குகளை வேட்டையாடியதற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், அதனை வசூல் செய்து, அரசு கணக்கில் ஒப்படைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai