சுடச்சுட

  

  தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 14th June 2018 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி மாவட்டத்தில் நிகழ் பருவத்தில் சாகுபடி செய்யப்பட உள்ள தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என விவசாயிகளை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
  இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் 2018 - 19-ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமங்களில் பயிரிடப்படும் தோட்டக்கலைப் பயிர்களான  வாழை,  மஞ்சள் மற்றும் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள், வறட்சி,  புயல், ஆலங்கட்டி மழை மற்றும் வெள்ளம் ஆகிய இயற்கை இடர்பாடுகளால், பயிர் இழப்பு ஏற்பட்டால் உரிய இழப்பீட்டுத் தொகை பெற ஏதுவாக, பிரதமரின் பயிர் காப்பீட்டுத்  திட்டத்தில் அனைத்து விவசாயிகள் (குத்தகை விவசாயிகள் உள்பட) பயிர்க் கடன் மற்றும் விவசாய நகைக் கடன் பெறும் விவசாயிகள், பயிர்க் கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில், முன்மொழிவுப் படிவம், பதிவுப் படிவம்,  சிட்டா அடங்கல் (அல்லது) பயிர் சாகுபடி சான்று, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முன்பக்க நகல் ஆகியவற்றுடன் அந்தந்த வட்டாரங்களில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கணினி மையங்களில் பிரீமியத் தொகையைச் செலுத்திக் காப்பீடு செய்யலாம். விவசாயிகள், பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு வாழைக்கு ரூ.2,537, மஞ்சளுக்கு ரூ.2,643, வெங்காயம் ரூ.1,324 செலுத்த வேண்டும். இது தொடர்பான விவரங்களுக்கு அந்தந்த வட்டாரங்களில் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai