Enable Javscript for better performance
தரமான மின் சாதனப் பொருள்களை பயன்படுத்த வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சிகளில் தரமான மின் சாதனப் பொருள்களை பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    அரூரில் 34 கிராம ஊராட்சிகள், மொரப்பூரில் 43 கிராம ஊராட்சிகள், பாப்பிரெட்டிப்பட்டியில் 19 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் நிகழாண்டில் நூற்றுக்கும் அதிகமான எல்.இ.டி. மின் விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன.
    இதேபோல், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் ரூ.2.50 லட்சத்தில் சிறிய அளவிலான உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின் விளக்குகள் ஓரிரு மாதத்தில் பழுதாகி விடுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
    இதேபோல், சுமார் ரூ.500 மதிப்பிலான ஒரு எல்.இ.டி. மின் விளக்கின் விலையானது ரூ.3,700-க்கும் அதிகமாக விலை மதிப்பீடு செய்து, ஊராட்சி நிர்வாகத்திடம் கூடுதல் பணத்தை தனியார் ஒப்பந்ததாரர் வசூல் செய்கின்றனாராம். இதனால் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக  ஊராட்சி செயலர்கள் புகார் கூறுகின்றனர். 
    எனவே, கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மின் விளக்குகள், மின் மோட்டார்களை தரமானதாக வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
    இதுகுறித்து உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.வெங்கடாசலம் கூறுகையில், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் ஊராட்சி ஒன்றியங்களில் எல்.இ.டி. மின் விளக்குகள், மின் சாதனப் பொருள்களை வழங்குவதற்காக தனியார் நிறுவனத்தினர் ஒப்பந்தம் எடுத்துள்ளனர். இது தொடர்பான டெண்டர் பணிகள் சென்னையில் நடைபெறுவதால், உள்ளூரில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவதில்லை.
    கிராம ஊராட்சிகளில் தரமற்ற மின் சாதனப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்துள்ளது. இதையடுத்து, கிராம ஊராட்சிகளில் பயன்படுத்தப்படும் எல்.இ.டி. மின் விளக்குகள் உள்ளிட்ட  மின் சாதனப் பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai