Enable Javscript for better performance
தருமபுரியில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை: மரங்கள் வேருடன் சாய்ந்தன- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை: மரங்கள் வேருடன் சாய்ந்தன

    By DIN  |   Published on : 18th May 2018 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி நகரில் வியாழக்கிழமை பிற்பகலில் திடீரென சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால், நகரின் பல பகுதிகளில் மரங்கள் வேருடன் சாய்ந்தன.
    தருமபுரி நகரில் வியாழக்கிழமை பிற்பகலில் திடீரென சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த மழை விடாமல் பெய்தது. நகரின் பல பகுதிகளிலும் பனிக்கட்டிகள் விழுந்ததை பொதுமக்கள் உறுதிபடுத்தினர்.
    இதைத் தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகிலுள்ள அப்பாவு நகரில் 3 இடங்களில் தூங்குமூஞ்சி மரம் உள்ளிட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தன.
    அதேபோல, இலக்கியம்பட்டி பிரதான சாலையில் ஒரு மரம் வேருடன் சாய்ந்தது. இதனால் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், இரு பக்க வாகனங்களும் ஒரே சாலையில் திருப்பிவிடப்பட்டன.
    தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சாலை போக்குவரத்து சீரடைந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai