கதிரியக்க தொழில்நுட்பப் பணியிடம்: அக். 15-இல் பதிவு சரிபார்க்க அழைப்பு

கதிரியக்க தொழில்நுட்பப் பணியிடத்துக்கு பதிவு செய்தவர்கள் வரும் அக். 15-ஆம் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில்

கதிரியக்க தொழில்நுட்பப் பணியிடத்துக்கு பதிவு செய்தவர்கள் வரும் அக். 15-ஆம் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பதிவை சரிபார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 25 கதிரியக்க தொழில்நுட்பப் பணி (ரேடியோதெரபி டெக்னீசியன்) காலியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டியல் வேலைவாய்ப்புத் துறையால் தயாரிக்கப்பட உள்ளது.
இதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 2018 ஜூலை 1 அன்று 18 வயது. (பொதுப் பிரிவினர், பகிரங்கப் போட்டியாளருக்கு வயது வரம்பு 30 ஆகும்). பி.எஸ்சி, ரேடியோதெரபி டெக்னாலஜி கல்வித் தகுதியை தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள முன்னுரிமையுள்ள மற்றும் முன்னுரிமையற்ற பதிவுதாரர்கள் அனைவரும் வரும் அக். 15-ஆம் தேதி தங்களது பதிவை அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் வந்து சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com