தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுற்றித் திரியும் எலிகள்! கட்டுப்படுத்த கோரிக்கை

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் எலிகளை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐந்து தளங்களைக் கொண்ட உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு கட்டடம் உள்ளது. சுமார் 500-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இங்கு ஆண்கள், பெண்கள் சிகிச்சைப் பிரிவு, எலும்பு, மூட்டு சிகிச்சைப் பிரிவு, தோல் சிகிச்சைப் பிரிவு, காது, மூக்கு அறுவை சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு என பல்வேறு சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன. உள்நோயாளிகள் பிரிவில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்களும் என ஏராளமானோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக, உள்நோயாளிகள் பிரிவில் உள்ள அனைத்து வார்டுகளிலும் எலிகள் அதிகளவில் காணப்படுகின்றன. சிறிய மற்றும் பெரிய அளவிலான இந்த எலிகள் இரவு நேரங்களில் சாதாரணமாக நோயாளிகளின் படுக்கை வரை வந்து செல்கின்றன. இந்த எலிகள் சாதாரண வார்டுகளில் மட்டுமின்றி அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும் காணப்படுகின்றன. இதனால், நோயாளிகள் அச்சத்துடனே வார்டுகளில் தங்கியுள்ளனர்.
மின்விசிறிகள் பழுது: உள்நோயாளிகள் பிரிவில் ஐந்து தளங்களிலும் சுமார் 800 மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலும் பழுதடைந்து இயங்குவதில்லை. இதனால், சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகள் போதிய அளவு காற்றோட்டமின்றி சிரமப்படுகின்றனர். அதேபோல, மழைக் காலங்களில் வார்டுகளுக்கு
உள்ளே சாரல் விழுகிறது.
எனவே, நோயாளிகளின் நலன் கருதி அனைத்து வார்டுகளிலும் சுற்றித்திரியும் எலிகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்தும், பழுதான மின்விசிறிகளை சரிசெய்து, வார்டுகளுக்கு உள்ளே மழைச் சாரல் விழாதவாறு ஐன்னல், சுவற்றில் பழுதுநீக்கவும் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நெகிழிப் பைகளை தவிர்க்கவும் இதுகுறித்து, மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாச ராஜ் கூறியது: 
நோயாளிகளின் உதவியாளர்கள் தங்களுக்கான உணவை நெகிழிப் பைகளில் கொண்டு வந்து உள்கொள்வதாகும். மேலும், அந்த உணவுப் பொட்டலங்களை வளாகங்களில் குப்பைகள் போல விட்டுச் செல்வதால், இந்த உணவை உள்கொள்ளவே எலிகள் அதிகளவில் வருகின்றன. இதைத் தவிர்க்க, நெகிழிப் பைகளில் கொண்டு வரும் உணவை பாதுகாவலர்கள் பரிசோதித்து அவற்றை பறிமுதல் செய்கின்றனர். சுகாதாரம் கருதி, அவ்வாறான உணவுப் பொருள்களை கொண்டுவருவதை விழிப்போடு தவிர்க்க வேண்டும். மேலும், வார்டுகளில் 4 சுகாதார ஆய்வாளர்கள் குழு அமைத்து எலிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஓராண்டில் 200-க்கும் மேற்பட்ட மின்விசிறிகள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. மின் விசிறிகளின் இயக்கத்தை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com