வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

தருமபுரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் ஏற்பட்டுள்ள வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு முறையான கணக்கெடுப்பை நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ் மாநில

தருமபுரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் ஏற்பட்டுள்ள வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு முறையான கணக்கெடுப்பை நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
தருமபுரி மாவட்டத்தில் தூர்வாரப்படாமல் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் வேலை வழங்கி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை பொய்த்துப் போனதால் தருமபுரி மாவட்டம் முழுவதும் மானாவாரிப் பயிர்கள் மற்றும் கிணற்றுப்பாசனப் பயிர்கள் காய்ந்து கருகிவிட்டன. எனவே, பாதிப்பை முழுமையாகக் கணக்கெடுத்து விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்.
வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் நீண்டகாலம் வளரும் மரங்களை முறையாக நடவு செய்து தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் அட்டை பெற்றுள்ள விவசாயத் தொழிலாளர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வரும் அக். 2,3,4 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெறவுள்ள விவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாட்டுக்கு தருமபுரி மாவட்டத்திலிருந்து 500 பேரை அழைத்துச் சென்று பங்கேற்கச் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி. மாதையன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஜெ. பிரதாபன், துணைத் தலைவர்கள் ஜி. ராஜகோபால், என். முருகேசன், துணைச் செயலர் என்.பி. ராஜி, பொருளாளர் சரோஜா, ஒன்றியச் செயலர்கள் பி. பரசுராமன் (கடத்தூர்), பெருமாள் (காரிமங்கலம்) உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com