மாம்பட்டியில் ரூ.7.83 கோடியில் துணை மின் நிலையம் திறப்பு

அரூரை அடுத்த மாம்பட்டியில் ரூ.7.83 கோடியில் துணை மின் நிலையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரூரை அடுத்த மாம்பட்டியில் ரூ.7.83 கோடியில் துணை மின் நிலையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரூர் வட்டம்,  மாம்பட்டியில் அமைந்துள்ள 110/33 கே.வி. துணை மின் நிலையத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இதையடுத்து, மாம்பட்டி துணை மின் நிலையத்தின் செயல்பாடுகளை தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லாகான் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் செயற்பொறியாளர் பூங்கொடி, வட்டாட்சியர் அன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாம்பட்டியில் தொடங்கப்பட்டுள்ள துணை மின் நிலையம் மூலம் பையர்நாய்க்கன்பட்டி, தீர்த்தமலை, மாம்பட்டி, ஈச்சம்பாடி, கொங்கவேம்பு, வேட்ரப்பட்டி, அனுமன்தீர்த்தம், டி.அம்மாப்பேட்டை, வேடகட்டமடுவு, பொய்யப்பட்டி, நரிப்பள்ளி, பெரியப்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், காட்டேரி உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சார வசதி பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com