திருவனந்தபுரம், திருப்பதி விரைவு ரயில்களை மொரப்பூரில் நிறுத்த வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பழைமையான மொரப்பூர் ரயில் நிலையத்தில், திருவனந்தபுரம், திருப்பதி செல்லும் விரைவு ரயில்களை நிறுத்திச் செல்ல உத்தரவிட வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம்


தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பழைமையான மொரப்பூர் ரயில் நிலையத்தில், திருவனந்தபுரம், திருப்பதி செல்லும் விரைவு ரயில்களை நிறுத்திச் செல்ல உத்தரவிட வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எம். பாபு, பொதுச் செயலர் கோ. ரகுநாதன் ஆகியோர் பிரதமர், ரயில்வே அமைச்சர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை மனு விவரம்:
தருமபுரி மாவட்டத்திலுள்ள பழைமையான மொரப்பூர் ரயில் நிலையத்தில் ஒரு சில விரைவு ரயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. சென்னை- திருவனந்தபுரம், சென்னை- பாலக்காடு, கோவை- திருப்பதி, கன்னியாகுமரி- மும்பை ஆகிய விரைவு ரயில்களையும் மொரப்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்திச் செல்ல உத்தரவிட வேண்டும்.
இவை இரு மார்க்கத்திலும் நின்று சென்றால் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள் மற்றும் திருப்பதி, பழனி செல்லும் பக்தர்கள் பெருமளவில் பயன்பெறுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இதே மனுவின் நகலை மத்திய ரயில்வே வாரியத் தலைவர், தென்னக ரயில்வே பொதுமேலாளர், சேலம் கோட்ட மேலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
ஒசூரில் அப்பாவுப்பிள்ளை பொன்னம்மாள் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை அளிப்பு
ஒசூர்,செப்.15: ஒசூரில் அப்பாவுப்பிள்ளை பொன்னம்மாள் அறக்கட்டளை சார்பில் 23- ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது .
இந்த அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. நிகழாண்டு 63 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ஜோதி பிரகாஷ் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியுசி தேசிய அமைப்பு செயலாளருமான கே.ஏ.மனோகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், உதவித்தொகை வழங்கினார்.
ஒசூரின் தந்தையாக விளங்கிய அப்பாவுப்பிள்ளை 35 ஆண்டுகாலம் ஒசூர் நகரின் பேரூராட்சி மற்றும் நகராட்சித் தலைவராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் மக்கள் சேவை ஆற்றியதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த விழாவில் பட்டயக் கணக்காளர் மணி, தொழில் அதிபர்கள் சத்தியமூர்த்தி, சின்னராஜ், ஐஎன்டியுசி மாவட்ட துணைத் தலைவர் முனிராஜ்,பொதுச் செயலாளர் ராஜேந்திரன், அமைப்புசாரா மாவட்ட பொதுச்செயலளர் சுந்தர்ராஜ், அமைப்புசாரா முத்தப்பா, சுகுமாரன்,பத்தலப்பள்ளி கோபால்,தமிழ் வளர்ச்சி மன்றம் கிருஷ்ணன், சிவந்தி அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com