கிராம ஊராட்சி விளையாட்டு போட்டிகள் செப். 22 இல் தொடக்கம்

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி விளையாட்டுப் 

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் செப். 22-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 125 கிராம ஊராட்சிகளிலும் செப். 22ஆம் தேதி முதல் நாள் போட்டிகளில் கலந்து கொள்வோர் பெயர்களைப்பதிவு செய்ய வேண்டும்.
23ஆம் தேதி விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும். 24ஆம் தேதி மூன்றாம் நாள் தேவைப்படின் விளையாட்டுப் போட்டிகளை நீட்டித்துக் கொள்ளலாம்.
காரிமங்கலம், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 126 ஊராட்சிளில் செப். 25ஆம் தேதி பதிவு செய்து கொண்டு, 26ஆம் தேதி போட்டிகளை நடத்தலாம். தேவைப்பட்டால் 27ஆம் தேதி போட்டிகளை நீட்டித்துக் கொள்ளலாம்.  போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. தடகளம், கபாடி, வாலிபால் ஆகிய போட்டிகள் இரு பாலருக்கும், கால்பந்து ஆண்களுக்கு மட்டும் நடைபெறவுள்ளன. வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்படும்.
போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு கலந்து கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்
எஸ். ராஜேந்திரன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com