அ.ம.மு.க. வேட்பாளர் பி.பழனியப்பன் வாக்குச் சேகரிப்பு
By DIN | Published On : 02nd April 2019 08:51 AM | Last Updated : 02nd April 2019 08:51 AM | அ+அ அ- |

தருமபுரி மக்களவைத் தொகுதியில் அ.ம.மு.க. சார்பில், போட்டியிடும் வேட்பாளர் பி.பழனியப்பன், பாலக்கோடு, பென்னாகரம் தொகுதிகளுக்குள்பட்ட கிராமங்களில் திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தார்.
பேகாரஅள்ளி, புலிகரை, செல்லியம்பட்டி, காட்டம்பட்டி, சோமனஅள்ளி, மோடுகுலகொள்ளஅள்ளி, கம்மாளப்பட்டி, கரகதஅள்ளி, பேளாரஅள்ளி, ஜெர்த்தலாவ், தண்டுகாரனஅள்ளி, கொலசனஅள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் பி.பழனியப்பன் பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, வேளாண் வளர்ச்சிக்கு நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதாகவும், சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கி வேலைவாய்ப்பு உருவாக்குவதாகவும் அவர் உறுதியளித்து பிரசாரம் செய்தார். அப்போது, அ.ம.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.