பதற்றமான வாக்குச் சாவடிகளை கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்: மாவட்ட தேர்தல் அலுவலர் சு.மலர்விழி

 தருமபுரி மாவட்டத்தில் தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச் சாவடிகளை மிகுந்த கவனத்துடன் நுண்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார் மாவட்ட தேர்தல் அலுவலர் சு.மலர்விழி.


 தருமபுரி மாவட்டத்தில் தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச் சாவடிகளை மிகுந்த கவனத்துடன் நுண்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார் மாவட்ட தேர்தல் அலுவலர் சு.மலர்விழி.
தருமபுரி மக்களவைத் தொகுதி பொதுத் தேர்தல், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, 150 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மக்களவைத் தொகுதி பொதுத் தேர்தல் பார்வையாளர் தேபேந்திரகுமார் ஜெனா, பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தல் பொதுப் பார்வையாளர் சஞ்சிவ்குமார் பெஸ்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.மலர்விழி பேசியது: தருமபுரி மக்களவைத் தேர்தல் மற்றும் அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட உள்ள பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் நுண்பார்வையாளர்கள் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் நடைபெறும் மாதிரி வாக்குப்பதிவு மற்றும் வாக்குச் சாவடிகளில் நடைபெறும் நடவடிக்கைகளை துல்லியமாக கண்காணித்து பொதுத் தேர்தல் பார்வையாளருக்கு உரிய அறிக்கை அளிக்க வேண்டும்.
தேர்தல் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 150 மத்திய அரசுப் பணியாளர்களுக்கும் அஞ்சல் வாக்குக்கான படிவங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் இயந்திரங்களை வாக்குச் சாவடி மையங்களில், வெப்பம் மற்றும் நேரடியாக ஒளிபடும் இடங்களில் வைக்காமல் பாதுகாப்பாக வைக்கப்படுவதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். மேலும், பதற்றமான வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுக்கு முன் நடைபெறும் மாதிரி வாக்குப்பதிவு உள்ளிட்டவைகளை நுண்பார்வையாளர்கள் மிகுந்த கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com