சுடச்சுட

  

  தருமபுரி மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் மருத்துவர் டி.என்.வி. எஸ். செந்தில்குமார் திங்கள்கிழமை கீரைப்பட்டியில் வாக்குச் சேகரித்தார்.
  தருமபுரி மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருத்துவர் டி.என்.வி. எஸ். செந்தில்குமார், அச்சல்வாடி, குடுமியாம்பட்டி, பேதாதம்பட்டி, வாச்சாத்தி, ஈட்டியம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, வேப்பம்பட்டி, எம்.தாதம்பட்டி, கம்மாளம்பட்டி, பொன்னேரி, பொய்யப்பட்டி, தீர்த்தமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
   அதேபோல், அரூர் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியின் இடைத் தேர்தல் தி.மு.க. வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார்,  நரிப்பள்ளி, பெரியப்பட்டி, சிக்களூர்,  கோட்டப்பட்டி,  சிட்லிங்,  ஏ.கே.தண்டா, எஸ்.தாதம்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். 
  இந்த தேர்தல் பிரசாரத்தில் விவசாய கடன்கள் ரத்து, கல்விக் கடன்கள் ரத்து,  மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, சாலைப் பணியாளர்கள் நியமனம்,  நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai