சுடச்சுட

  

  தருமபுரி நகரில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தார்.
  அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் வாக்குச் சேகரித்தார். 
  தருமபுரி மதிகோன்பாளையத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து, மன்றோ தூண் சந்திப்பு,  குமாரசாமிப்பேட்டை,  எம்.ஜி.ஆர்.நகர்,  பிடமனேரி, பேருந்து நிலையம்,  சாலை விநாயகர் கோயில் தெரு, அன்னசாகரம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் அன்புமணி ராமதாஸ் வாக்குச் சேகரித்தார். அப்போது, மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் பா.ஜ.க, தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai