இரு பேரவைத் தொகுதிகளிலும் தயார் நிலையில்  வாக்குப் பதிவு இயந்திரங்கள்

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.18) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.18) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
அரூர் (தனி) தொகுதியில் 299 வாக்குச் சாவடிகளும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 314 வாக்குச் சாவடிகளும் உள்ளன.
இந்த வாக்குச் சாவடி மையங்களுக்குத் தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களிலும் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதன்கிழமை மாலையில் வந்தனர்.
தருமபுரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலுடன், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறுவதால், ஒவ்வொரு அறையிலும் 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் ஒவ்வொருவரும் இரண்டு வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் மின் விளக்குகள், குடிநீர், நிழல் வசதிகள்,  மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கான சாய்தாள நடைமேடை வசதிகள், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com