ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் பலி
By DIN | Published On : 21st April 2019 05:51 AM | Last Updated : 21st April 2019 05:51 AM | அ+அ அ- |

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தாதபிள்ளையனூரைச் சேர்ந்தவர் செங்கோட்டையன் மகன் சிவபெருமாள் (30). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்தார்.
தனது நண்பர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்து விட்டு, ஆலாம்பாடி பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது சிவபெருமாள் ஆழமான பகுதிக்கு சென்றதால் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் ஒகேனக்கல் போலீஸார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.