காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் 795 விண்ணப்பங்கள் விநியோகம்
By DIN | Published On : 27th April 2019 05:12 AM | Last Updated : 27th April 2019 05:12 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் நிகழாண்டில் மாணவியர் சேர்க்கைக்கு இதுவரை 795 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
காரிமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளநிலை பிரிவில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், அறிவியல் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல், புள்ளியியல், கணினி அறிவியல் உள்பட 12 வகையான பாடப்பிரிவுகள் உள்ளன. அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் மொத்தம் 580 மாணவியர் சேர்க்கப்பட உள்ளனர்.
இந்த நிலையில், நிகழாண்டுக்கான மாணவியர் சேர்க்கைக்கு கடந்த ஏப். 16 முதல் கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இவ்விண்ணப்பங்களை பொதுப் பிரிவு மாணவியர் ரூ.50 கட்டணம் செலுத்தியும், தலித் மற்றும் பழங்குடியின மாணவியர் அசல் ஜாதிச் சான்றிதழை காண்பித்து இலவசமாகவும் பெற்றுக் கொள்ளலாம். இதனடிப்படையில் வெள்ளிக்கிழமை வரை 795 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பம் பெறவும், அதை பூர்த்தி செய்து கல்லூரியில் வழங்கவும் மே 6 கடைசி நாளாகும். அதேபோல, கலந்தாய்வு மே 13-இல் தொடங்க உள்ளது என கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.