பாவக்கல் அரசுப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

ஊத்தங்கரையை அடுத்த பாவக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.


ஊத்தங்கரையை அடுத்த பாவக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
பாவக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் 107 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஊத்தங்கரை ஒன்றிய அளவில் முதல் பள்ளியாக வந்த பாவக்கல் பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் மத்தூர் கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் நடராஜன் ஆகியோர் பாராட்டினர். இதில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் வி.கெளதமன் பாராட்டி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் வேங்கன் தலைமை வகித்தார். மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த துணைத் தலைமையாசிரியர் அவுதர் பாஷா மற்றும் ஆசிரியர்கள் அசோகன், தவமணி, கணேசன், ரவீந்தர்,வேடியப்பன், அன்பரசு, சந்திரசேகரன், ஆசிரியை மீனா, பகுதிநேர கணினி ஆசிரியர் ஏகநாதன் ஆகியோரை பெற்றோர்கள் வாழ்த்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com