முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
தருமபுரியில் ஆக. 10-இல்தடகளப் போட்டிகள்
By DIN | Published On : 04th August 2019 05:11 AM | Last Updated : 04th August 2019 05:11 AM | அ+அ அ- |

தருமபுரியில் வரும் ஆக. 10-ஆம் தேதி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட தடகள கழகம் சார்பில் வெளியிட்ட செய்தி: தருமபுரி மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டிகள் வரும் 10-ஆம் தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளன. இதில், 16, 18 மற்றும் 20 வயதுக்குள்பட்ட வீரர், வீராங்கனையருக்கு 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 400 மீ, 800 மீ, 1,500 மீ. ஓட்டப் போட்டிகள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள்நடைபெறுகின்றன.
இப்போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெறும் வீரர், வீராங்கனையருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், இதில் தேர்வு செய்யப்படுவோர் வரும் ஆக. 30 மற்றும் செப். 1-ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் செல்லப்படுவர். எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்புக்கு: 94432 66228,
98654 65160.