ஏரி நில ஆக்கிரமிப்பாளர்கள் 68 பேருக்கு நோட்டீஸ்
By DIN | Published On : 04th August 2019 05:11 AM | Last Updated : 04th August 2019 05:11 AM | அ+அ அ- |

தருமபுரி அருகே அன்னசாகரம் ஏரி நிலத்தில் ஆக்கிரமித்துள்ள 68 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி அருகே உள்ளது அன்னசாகரம் ஏரி. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிக்கு, முக்கல்நாயக்கன்பட்டிமலை, வத்தல்மலை ஆகிய இடங்களில் பொழியும் மழைநீர், வாய்க்கால் வழியாக வருகிறது.
இந்த ஏரி கடந்த 5 ஆண்டுகளாக நீர்வரத்தில்லாததால் முள்புதராக மாறியது.
இந்த ஏரியில், அன்னசாகரம் பாசன விவசாயிகள் சங்கம் மூலம் கடந்த ஒரு மாதமாக கரையைப் பலப்படுத்துதல், மதகு, வரத்துக் கால்வாய்கள், நீர் வெளியேறும் கால்வாய் தூர்வாரும் பணிகள் என ரூ.70 லட்சத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஏரிக்கரையின் மேல்பகுதியை ஆக்கிரமித்து 68 பேர் வீடுகள் கட்டியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, ஏரி நிலத்தில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ள 68 பேருக்கு தருமபுரி பொதுப்பணித் துறை சார்பில் 21 நாள்களுக்குள் தாமாகவே அவற்றை அகற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி நோட்டீஸ்
வழங்கப்பட்டுள்ளது.