ரூ.2.26 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

பாலக்கோடு, நல்லம்பள்ளி, பென்னாகரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 1,433 பயனாளிகளுக்கு ரூ.2.26 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பாலக்கோடு, நல்லம்பள்ளி, பென்னாகரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 1,433 பயனாளிகளுக்கு ரூ.2.26 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 1,433 பயனாளிகளுக்கு ரூ.2.26 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி, மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது: 
தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் ரூ.24.83 கோடி மதிப்பில் 361 ஏரி, குளங்கள் மற்றும் குட்டைகள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உழைக்கும் மகளிருக்கு ரூ.20 ஆயிரம் அல்லது 50 சதவீத மானியத்தில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ஒவ்வொருவருக்கும் ரூ.25,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.  மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.31,250 வரை மானியம் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணிக்கு செல்லும் பெண்களின் முன்னேற்றத்துக்காக அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லாகான், சார்- ஆட்சியர் ம.ப.சிவன் அருள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம். காளிதாசன், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com