ஆஷா பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ. 7 ஆயிரம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஆஷா பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆஷா தொழிலாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

ஆஷா பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆஷா தொழிலாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு , மாவட்ட ஆஷா தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.மேனகா தலைமை வகித்தார்.
 தருமபுரி மாவட்டத்தில் மலைக் கிராமங்களை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் கர்ப்பிணிகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி, ஊட்டச் சத்துக்கான இணை உணவுகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் ஆஷா பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால், இந்தப் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 610 வழங்கப்படுகிறது.
 எனவே, இந்தியாவின் பிற மாநிலங்களில் வழங்குவது போல் ஆஷா பணிப் பெண்களுக்கு மாதம் ரூ. 7 ஆயிரம் வழங்க வேண்டும்.
 ஆஷா பணியாளர்களை மருத்துவத் துறையில் கௌரவமாக நடத்த வேண்டும். ஆஷா பணிப் பெண்கள் செய்த பணிக்கு வழங்கப்பட்டுள்ள உதவித் தொகைகளை, தணிக்கை செய்து மீண்டும் வசூலிப்பதை கைவிட வேண்டும்.ஆஷா தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 4 ஜோடி சீருடைகளை தையல் கூலியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
 இதில், சிஐடியு மாவட்டச் செயலர் சி.நாகராஜன், மாவட்ட பொருளர் ஏ.தெய்வானை, உழைக்கும் பெண்களின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளர் சி.கலாவதி, பொருளர் கே.ருக்மணி, சங்க நிர்வாகிகள் டி.தீபா, வி.நந்தினி, எம்.உமா, சி.அம்பிகா, பி.தீபா, சி.உத்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com