சுடச்சுட

  

  தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
  மெணசி மோசிகீரனார் முத்தமிழ் மன்ற பொன்விழாவையொட்டி நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவுக்கு, முன்னாள் அமைச்சர் வ. முல்லைவேந்தன் தலைமை வகித்துப் பேசினார். இதில், பாவலர் முல்லையரசு எழுதிய அரிமா நோக்கு என்ற நூலைப் பேராசிரியர் அப்துல் காதர் வெளியிட, அதனை கிருஷ்ணகிரி பிஎஸ்வி கல்லூரி தாளாளர் செல்வம் பெற்றுக்கொண்டார்.
  இதையடுத்து, நீரோட்டம் என்ற நூலை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வித்யா மந்திர் தாளாளர் சந்திரசேகர் வெளியிட, அரூர் அம்மன் கிரானைட்ஸ் உரிமையாளர் முத்து ராமசாமி பெற்றுக்கொண்டார். 
  விழாவில், பாவலர் முல்லையரசு வரவேற்றார். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மதியழகன், பேராசிரியர் வணங்காமுடி, கவிஞர் கடவூர் மணிமாறன், முன்னாள் எம்எல்ஏ குப்புசாமி, முத்தமிழ் பதிப்பக உரிமையாளர் முத்தமிழன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai