நீர்வளத்தை பெருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: ஆட்சியர் சு.மலர்விழி

நீர்வளத்தைப் பெருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி வலியுறுத்தினார்.

நீர்வளத்தைப் பெருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி வலியுறுத்தினார்.
 தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் இருமத்தூரில் வியாழக்கிழமை சுதந்திர தின விழாவையொட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியர் சு. மலர்விழி பேசியது: தருமபுரி மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்களைக் கண்டறிந்து நீக்கம் செய்யவும் வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் ஆக.16 முதல் 30 வரை அந்தந்த பகுதிகளில் வீடு வீடாக நேரில் சென்று சரிபார்க்கும் பணியை மேற்கொள்ள இருக்கிறார்கள். எனவே, 18 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்து, ஊராட்சிக்குத் தேவையான வளர்ச்சித் திட்டம் செயல்படுத்த பொதுமக்கள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை கைவிட்டு, நீர் வளத்தைப் பெருக்க மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com