முதல்வர் குறைகேட்பு முகாம்களில் வழங்கும் மனுக்கள் மீது விரைவில் தீர்வு

தமிழக முதல்வரின் சிறப்பு குறைகேட்பு முகாம்களில் வழங்கும் மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்படும் என்றார் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி.தருமபுரி அருகே வெள்ளோலை, அரூர் வட்டம், தாசிரஅள்ளி, எலவடை ஆகிய

தமிழக முதல்வரின் சிறப்பு குறைகேட்பு முகாம்களில் வழங்கும் மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்படும் என்றார் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி.
தருமபுரி அருகே வெள்ளோலை, அரூர் வட்டம், தாசிரஅள்ளி, எலவடை ஆகிய கிராமங்களில் முதல்வரின் சிறப்பு குறைகேட்பு திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை முகாம்கள் நடைபெற்றன.
இந்த முகாம்களில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சு.மலர்விழி பேசியது: விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகளை தீர்வு காண்பதற்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் முதல்வரின் சிறப்பு குறைகேட்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதில், நகர்புறங்களில் அனைத்து வார்டுகளிலும், கிராமங்களிலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் குறிப்பிட்ட நாள்களில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, வேளாண் மற்றும் பிற துறை அலுவலர்களைக் கொண்ட குழு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெறுவர். இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு ஒருவார காலத்துக்குள் அனுப்பி வைக்கப்படும். அம்மனுக்கள் மீது விரைவில் உரிய தீர்வு எட்டப்படும். பொதுமக்கள் முகாம்களில் வழங்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதேபோல, நல்லம்பள்ளி வட்டம், வெங்கட்டம்பட்டி, மிட்டாரெட்டி அள்ளி உள்பட மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இந்த முகாம்கள் நடைபெற்றன. இதில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கோவிந்தன், வட்டாட்சியர்கள் சுகுமார், செல்வகுமார், தமிழ்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் திட்ட முகாமுக்கு  ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சேதுராமன், ஊத்தங்கரை வட்டாட்சியர் சித்ரா, ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்னபூரணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் நாகராஜ், மோட்டுப்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் ஏ.சி.தேவேந்திரன், நிலவள வங்கித் தலைவர் சாகுல் ஹமீது, நகரச் செயலர் சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
அரூரில்... 
சிறப்பு குறைதீர் முகாம் எச்.தொட்டம்பட்டி, வேப்பநத்தம், சாமண்டஹள்ளி, ஆர்.கோபிநாதம்பட்டி, பெரியப்பட்டி, கீழானூர் ஆகிய ஊராட்சிகளில் சனிக்கிழமை நடைபெறுகிறது. ஆக. 25-ஆம் தேதி அச்சல்வாடி, கே.வேட்ரப்பட்டி, எம்.வேட்ரப்பட்டி, சந்தப்பட்டி, ஆண்டியூர், செல்லம்பட்டியிலும், ஆக. 26-ஆம் தேதி கீரைப்பட்டி, கொங்கவேம்பு, நவலை, மருதிப்பட்டி, வேடகட்டமடுவு, வீரப்பநாய்க்கன்பட்டியிலும், ஆக. 27-இல் தாதராவலசை, மாம்பட்டி, போளையம்பள்ளி, எம்.வெளாம்பட்டி, பையர்நாய்க்கன்பட்டி, வேப்பம்பட்டியிலும், ஆக. 28-இல் எல்லப்புடையாம்பட்டி, சந்திராபுரம், செட்ரப்பட்டி, கீழ்மொரப்பூர், கோட்டப்பட்டி, ஈட்டியம்பட்டியிலும், ஆக. 29-இல் மோப்பிரிப்பட்டி, மத்தியம்பட்டி, பறையப்பட்டி, சிட்லிங், நரிப்பள்ளியிலும், ஆக. 30-இல் அக்ராஹரம், தொப்பம்பட்டி ஆகிய கிராம ஊராட்சி
களிலும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com