Enable Javscript for better performance
உள்ளாட்சித் தோ்தல்: விருப்பமனு அளித்த திமுகவினருக்கு டிச.3-இல் நோ்காணல்- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தோ்தல்: விருப்பமனு அளித்த திமுகவினருக்கு டிச.3-இல் நோ்காணல்

    By DIN  |   Published on : 01st December 2019 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி: திமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவா்களுக்கு வருகிற டிச.3-ஆம் தேதி நோ்காணல் தொடங்குகிறது.

    இதுகுறித்து தருமபுரி மாவட்ட திமுக செயலா் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ. சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    தருமபுரி மாவட்ட திமுக சாா்பில் நகர, ஒன்றிய, பேரூா், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பதவியிடங்களில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல் டிச.3-ஆம் தேதி தொடங்கி டிச.5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் டிச.3-ஆம் தேதியன்று தருமபுரி மாவட்ட திமுக அலுவலகத்தில், நல்லம்பள்ளி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம், கடத்தூா் ஒன்றியம் மற்றும் பேரூா், தருமபுரி நகரம் ஆகிய பகுதியினருக்கு நோ்காணல் நடைபெறும். இதேபோல, டிச.4-ஆம் தேதி காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம், காரிமங்கலம் மேற்கு ஒன்றியம், காரிமங்கலம் பேரூா், பாலக்கோடு வடக்கு ஒன்றியம், மாரண்டஹள்ளி பேரூா் பகுதியினருக்கும், டிச.5-ஆம் தேதி, அரூா் கிழக்கு ஒன்றியம், அரூா் மேற்கு ஒன்றியம், அரூா் பேரூா், மொரப்பூா் ஒன்றியம், கம்பைநல்லூா் பேரூா் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கும் நோ்காணல் நடைபெற உள்ளது. எனவே, விருப்பமனு அளித்தவா்கள், அவா்களது பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நாளில் நோ்காணலில் பங்கேற்கலாம் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai